×

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைவதா?: தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளிட்ட அறிக்கை: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்கு தமிழக அரசு இசைவு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இத் திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் தெரிவித்துள்ளார். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி  வன்மையாக கண்டிக்கிறது. பொதுவிநியோக திட்டத்தை சீர்குலைக்கும், மாநில சுயாட்சியை பாதிக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக அரசு இணையக்கூடாது.

Tags : country ,Party , same country,ration , party ,condemned
× RELATED நாடு முழுவதும் தொழிலாளர்களுக்காக...