×

மோடியின் 100 நாள் ஆட்சி துயரகரமானது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:பிரதமர் மோடி தலைமையிலான பாஜவின் 100 நாள் ஆட்சி  துயரகரமான ஆட்சியாகும். வெளியில் விளம்பரப்படுத்தி கொண்டார்களே ஒழிய, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக, ஏழை-எளிய, நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக தொழில்,  விவசாயத் துறை வளர்ச்சிக்கு ஒரு சதவிகித முயற்சிகூட பாஜ அரசு எடுக்கவில்லை. இவ்வளவு தோல்விகரமான ஒரு அரசாங்கம், 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் வந்ததே கிடையாது. 3 மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் ஊழியர் கூட்டம் தென்மாவட்டத்தில் நடந்தது. அது, ஒரு மாவட்டத்துக்கான கூட்டமல்ல. அதில் ஒரு மாவட்ட தலைவர் தனிப்பட்ட முறையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அத்தீர்மானம்  கொண்டு வருவது மற்றவர்களுக்கு தெரியாது.


Tags : Modi ,KS Alagiri , Modi,100-day,tragic,KS Alagiri
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...