×

கோயம்பேடு பகுதியில் வீடுகளில் புகுந்து செல்போன் திருடிய 2 மாணவர்கள் கைது: 11 செல்போன் பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் வீடுகளில் புகுந்து செல்போன் திருடிய மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக செல்போன்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கோயம்பேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து செல்போனை திருட முயன்ற  2 சிறுவர்களை, வீட்டின் உரிமையாளர் சுற்றிவளைத்து பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்டவர்கள் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்று தெரியவந்தது.

 இவர்கள, அதிகாலையில் கதவு திறந்திருக்கும் வீடுகளில் நுழைந்து, செல்போனை திருடிச் சென்றதும், கோயம்பேடு கருமாரியம்மன் நகரில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த சிலையின் கழுத்தில் இருந்த ரூபாய் நோட்டு மாலையை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும், திருடிய செல்போன்களை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தில் சினிமா பார்த்தும், ஓட்டல்களில் சாப்பிட்டும் செலவு செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ₹1,100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : Coimbatore , Two students ,arrested, stealing cell phones ,Koyambedu
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு