×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கோயம்பேடு போலீசார், பஸ் நிலைய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ந்நிலையில்,  கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றபோது, 2வது நடைமேடையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்ட அந்த கும்பல், தங்களிடம் இருந்த கஞ்சாவை அங்கேயே போட்டுவிட்டு தப்பியது. அவர்கள் விட்டுச்சென்ற 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.* பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்த சுரேஷ் (25) நேற்று அதிகாலை வீட்டின் அருகே பைக்கில் சென்றபோது, சென்டர் மீடியனில் பைக் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.* நெற்குன்றம் பால்வாடி 1வது தெருவை சேர்ந்த சசிகலா (40) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

* பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் முருகன் கோயில் உண்டியலை உடைத்து ₹5 ஆயிரம், 5 சவரன் நகையை கொள்ளையடித்த, சென்னீர்குப்பம் வெற்றிலை தோட்டம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (22), என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவை சேர்ந்த அஜித் (30), செங்குன்றம் சிறுங்காவூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* சென்னை பட்ரவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுபேஷ் (27), நேற்று அவருடன் வேலை செய்யும் குமார் மற்றும் சுஜித் ஆகியோருடன் முடிச்சூர் சர்வீஸ் சாலையில் உள்ள ஏரியில் குளித்தபோது, சுபேஷ் நீரில் மூழ்கி இறந்தார்.
* ஆதம்பாக்கம் நிலமங்கை நகரை சேர்ந்த சுகந்தம் (75) என்பவர் வீட்டின் அருகே நின்றிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், சுகந்தம் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர்.
* ஆதம்பாக்கம் கக்கன் நகரில் கண்ணன் என்பவரின் டீக்கடை பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ₹15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும், அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து, ₹5 ஆயிரம் கொள்ளயைடிக்கப்பட்டது.


Tags : bus stand ,Coimbatore , Gundas , 10 robbers ,t ATM centers
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது