×

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு

தாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான்  அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் கேப்டன் ரஷித் கான் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான், 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 260 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஸத்ரன் 87, அஸ்கர் ஆப்கன் 50, அப்சர் ஸசாய் 48*, ரஷித் கான் 24 ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் ஹசன் 3, மிராஸ், தைஜுல், நயீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 398 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் மட்டுமே எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. ஷத்மன் இஸ்லாம் 41, முஷ்பிகுர் ரகிம் 23, மொசாடெக் 12 ரன்னில் வெளியேறினர். கேப்டன் ஷாகிப் ஹசன் 39, சவும்யா சர்க்கார் (0) இருவரும் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ரஷித் 3, ஜாகிர் கான் 2, முகமது நபி 1 விக்கெட் வீழ்த்தினர்.கை வசம் 4 விக்கெட் மட்டுமே இருக்க, வங்கதேசத்துக்கு இன்னும் 262 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Afghanistan , Opportunity , Afghanistan , win
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி