×

எம்சிசி-முருகப்பா ஹாக்கி: தங்க கோப்பையை தக்கவைத்தது ஐஓசி

எம்சிசி - முருகப்பா தங்க கோப்பை ஹாக்கித் தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) அணி, பஞ்சாப் நேஷனல் வங்கி அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஐஓசி அணி 3-1 என்ற கோல் கணக்கில்வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின் குர்ஜிந்தர் சிங் 2 கோல் (23வது, 28வது நிமிடத்தில் பெனால்டி கார்னர்), தீபக் தாகூர் 1 கோல் (59வது நிமிடம், பீல்டு கோல்) அடித்தனர். பஞ்சாப் வங்கி சார்பில் விஷால் (12வது நிமிடம், பி.சி.) ஆறுதல் கோல் போட்டார். பட்டம் வென்ற ஐஓசி அணியினர் முருகப்பா கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

Tags : IOC ,Gold Cup , MCC-Murugappa,Hockey, IOC retains,Gold Cup
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி...