×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்டாமிங் ஆபரேஷன் 510 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று இரவு முதல் போலீசார் விடியவிடிய நடத்திய ஸ்டாமிங் ஆபரேஷனில் 510பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர். அப்போது, வாகன தணிக்கை, தங்கும் விடுதிகளில் சோதனை, குடிபோதையில் வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தல், உரிய ஆவணங்கள் இன்றி விடுதிகளில் எவரேனும் தங்கியுள்ளார்களா,

சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து விசாரணை, அரசு தடை விதித்துள்ள புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறா, மதுபானம் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் விடியவிடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் 510பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2ம்நாளாக இன்றும் இரவு 10 மணி வரை ஸ்டாமிங் ஆபரேஷன் நடைபெறுகிறது. திருவண்ணாமலை நகரில் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள் என 150 போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thiruvannamalai district , Thiruvannamalai, Stamming Operation, Case
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...