×

வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை: தூர்வார கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடந்த ஆண்டு வடிகால் வாய்க்கால்கள் பொதுப்பணித்துறையினரால் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் வடிகால் வாய்கால்களில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துவிட்டது. தற்போது சிதம்பரத்தை சுற்றியுள்ள வாய்கால்ககளில் ஆகாயத்தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது. சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் அருகே உள்ள வடிகால் வாய்க்கால் முழுவதையும் ஆக்கிரமித்து ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளது. மேலும் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடையிலும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. இனி மழைக்காலம் துவங்கியுள்ளது.

வீராணம் ஏரியிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆனால் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் வடியாமல் வெள்ள பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக சிதம்பரம் நகரை சுற்றியுள்ள வாய்கால்கள், வடிகால் வாய்கால்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்கின்றனர்.

Tags : Drain drain, aeration
× RELATED புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்