×

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொன்டுவர நடவடிக்கை: பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொன்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர், ஈரோட்டில் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பாலியல் தொல்லைகளில் ஈடுப்படும் ஆசிரியர்களால் நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்று கவலை தெரிவித்தார்.

ஆதலால் பாலியல் புகார்களில் ஈடுப்படும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பள்ளியில் 11-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அறைகளில் கேமரா பொருத்தப்படும். பிற வகுப்புகளில் கேமரா பொறுத்த நிதி தேவை படுவதால் அது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


Tags : classrooms ,schools ,Senkottayan , 90 Thousand School, Smart Classrooms, Conduvara, Action, Minister Sengottaiyan
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...