×

ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தினருடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர்களுடன் நடக்கவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது : தலிபான் தீவிரவாத இயக்கத்தின் சில முக்கிய தலைவர்களுடன் கேம்ப் டேவிட்டில் ஞாயிற்றுக்கிழமை ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் அதிபருடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருந்ததாக டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இது போன்ற முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ள சமயத்தில், தலிபான்கள் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியிருக்கக் கூடாது என்றும் அதனால் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை முன்வைப்பதற்கான தகுதியை தலிபான்கள் இழந்துவிட்டதாக கூறினார்.

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள காபூலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் உள்பட 12 கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். மேலும் ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டாஸ் மற்றும் புலேகும்ரி நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தலிபான்கள் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Donald Trump ,US ,talks ,leaders ,Afghanistan ,Taliban , US President , Afghanistan, Taliban Movement, negotiations, cancellation
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...