×

என்.மங்கலத்தில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரிய இளைஞர்கள்

திருவாடானை :  என்.மங்கலம் கிராமத்தில் அரசு சார்பில் பாசன கண்மாய்களை தூர் வாராத நிலையில், கிராமத்து இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் பாசன கண்மாயை தூர்வாரி உள்ளனர். திருவாடானை அருகே உள்ளது என்.மங்கலம் கிராமம். இங்கு சுமார் 650 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் பாயும் பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மேடாகி போன நிலையில், சீமை கருவேல மரங்களும் படர்ந்து கண்மாயை மூடிவிட்டது. இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த கண்மாயை தூர்வாரி தரவேண்டுமென பலமுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கிராமத்து இளைஞர்கள் ஒன்று கூடி தங்களது சொந்த செலவிலும், கிராம பொது மக்களிடம் வசூல் செய்தும் கண்மாயை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி ஜேசிபி மூலம் கண்மாய் உள்பகுதியில் இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றினர். பின்னர் குறிப்பிட்ட பரப்பளவிற்கு கண்மாயை தூர்வாரி உள்ளனர். இதுகுறித்து என்.மங்களம் கிராம இளைஞர்கள் கூறுகையில், தற்போது பல இடங்களில் குடிமராமத்து பணி மூலம் கண்மாய் குளங்கள் தூர்வாரப்பட்டு இருக்கிறது.

 ஆனால் எங்கள் ஊருக்கு இதுவரை கண்மாய் ஊரணிகள் தூர்வாரப்படவில்லை. இதனால் நாங்களே சொந்தமாக கண்மாயிலுள்ள முள் செடிகளை அகற்றி தூர்வாரி உள்ளோம். இருப்பினும் கண்மாய் முழுவதும் தூர்வார பல லட்சம் செலவாகும், அதற்கு போதிய அளவில் நிதி இல்லாததால் முழுமையான பணியை செய்ய முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து திட்டத்தில் எங்கள் கண்மாயை சேர்த்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : NM Mangalore , Youngsters ,Thiruvadanai ,Water pond
× RELATED விஜயதரணியின் சாதனையை முறியடித்த தாரகை கத்பர்ட்!