×

கேரளாவின் பிரசத்திப்பெற்ற ஓணம் பண்டிகை தமிழகத்திலும் கோலாகலம்

நீலகிரி: கேரளாவின் பிரசத்திப்பெற்ற ஓணம் பண்டிகை தமிழகத்திலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற 11-ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் இணைந்து 10 வகையான பூக்களை கொண்டு பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் மீட்டும் கைத்தட்டியும் நடனமாடியும் மகிழ்ந்தனர்.

அதேபோல் மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைத்தட்டலை பெண்கள் இணைந்து ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் மலையாளம் மொழி பேசும் மக்கள் அதிகமாய் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களைகட்டி வருகிறது. நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவியர்கள் விதவிதமான அத்திபூக்கோல மிட்டும் நடனமாடியும் ஒருவரை ஒருவர் வாழ்த்து தெரிவித்தும் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள்.


Tags : Kerala ,festival ,Onam ,Tamil Nadu , Onam festival, Tamil Nadu , Koalakalam
× RELATED திருச்சூர் பூரம் திருவிழாவையொட்டி...