×

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மீது இன்ஜின் மோதி விபத்து: 12 பேர் காயம்

மதுரை:  மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த செங்கோட்டை பயணிகள் ரயில் மீது, வேகமாக வந்த இன்ஜின் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் காயமடைந்தனர்.  மதுரை ரயில் நிலையத்தின் 6வது பிளாட்பாரத்தில், நேற்று மாலை 4.30 மணி அளவில் மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் புறப்பட தயாராக இருந்தது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது ரயில்  இன்ஜினை மாற்றுவதற்காக, டிரைவர் மற்ெறாரு இடத்திலிருந்து ரயில் இன்ஜினை எடுத்து வந்தார். அதிவேகமாக வந்த இன்ஜின், கண்ணிமைக்கும் நேரத்தில் பயணிகள் இருந்த ரயில் பெட்டி மீது பயங்கரமாக ேமாதியது. இதில் பயணிகள் 12  பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் 6வது பிளாட்பாரத்திற்கு வந்தனர். ரயில்வே ஆம்புலன்சும், ரயில்வே டாக்டர்கள் 4 பேரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு காயம்பட்டவர்களில் சிலர் ரயில்வே  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டுச் ெசன்றது.

Tags : Madurai , Madurai ,Railway,engine collision
× RELATED மதுரையில் இருந்து சிறப்பு ரயில் மூலம்...