×

ஆராய்ச்சிகள் முடிந்ததும் பசுமாட்டின் கோமியம் விரைவில் மருந்துப்பொருளாக அறிவிப்பு: மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் பேட்டி

கோவை: பசுவின் கோமியம் விரைவில் மருந்துப்பொருளாக அறிவிக்கப்படும் எனவும், தற்போது அதற்கான ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.கோவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  புற்றுநோய் போன்ற  நோய்களுக்கு சர்வதேச அளவிலான  சிகிச்சை இந்தியாவில் கிடைக்கிறது. நோயாளிகளின்   வீடுகளுக்கு மருத்துவர்களே சென்று சிகிச்சை அளிக்கும் முறை வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.  மருத்துவ சேவையில் இந்தியா சிறப்பாக திகழ வேண்டும் என்ற பிரதமர் மோடியின்  விருப்பத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வரும் 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இந்திய பொருளாதாரத்திற்கு  வலுசேர்க்கும் வகையில் மருத்துவ  சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரி துவங்கப்பட உள்ளது. இதன்மூலம் வரும் 5 ஆண்டில் 1 லட்சம் மருத்துவ படிப்புக்கான இடம்  உருவாக்கப்படும். தமிழகத்தில் சேலம், மதுரை, தஞ்சை மருத்துவக்கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி  மருத்துவ இடங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பசுமாட்டின் கோமியத்தை மருந்துப்பொருளாக அறிவிப்பதற்கான ஆராய்ச்சி  நடந்து வருகிறது. ஆராய்ச்சி முடிந்ததும் விரைவில் மருந்துப்பொருளாக கோமியம் அறிவிக்கப்படும். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

Tags : Interview ,Federal Health Department , researches ,completed, Pharmaceutical Announcement, Co-Minister
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு