×

கொடைக்கானலில் ‘ஆப் சீசன்’ துவக்கம்

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதம் சீசன் காலங்களாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசனான ‘ஆப் சீசன்’ எனப்படும். இந்த சமயத்தில் வெயிலின் தாக்கமின்றி இதமான குளிர்  இருக்கும். ஆப் சீசனை அனுபவிக்கும் விதமாகவும், வார விடுமுறையை கொண்டாடும் விதமாகவும் நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.பைன் பாரஸ்ட், கிரீன் வேலி, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. இதில் தூண்பாறை, கிரீன்வேலி பகுதிகளில் மேகமூட்டம்  அதிகமாக இருந்ததால் காண முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


Tags : Kodaikanal , Start , season , Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...