×

சிவகங்கையில் பட்டப்பகலில் பயங்கரம் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

* கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
* 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகங்கை:  சிவகங்கையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி, கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது, ஓட ஓட விரட்டி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கலெக்டர் அலுவலகம் அருகே  பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை, திருப்புத்தூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. நேற்று காலை 11.30 மணியளவில் வங்கி எதிரே பைக்கில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அதை, ஆட்டோ மற்றும் டூவீலரில் வந்த 6 பேர்  கொண்ட கும்பல் வழி மறித்தது. உடனே பைக்கை போட்டுவிட்டு 2 பேரும் சாலையோரத்தில் இருந்த மயானப்பகுதி நோக்கி ஓடினர். அந்த கும்பல் இருவரையும் விரட்டி சென்றது. சிக்கிய ஒருவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால்  சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை துண்டானது. உடன் வந்தவர் தப்பி விட்டார். பின்னர் அந்த கும்பல் வந்த வாகனங்களிலேயே தப்பியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்து கொடூர கொலையால் சாலையில்  சென்றவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்து சிவகங்கை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தனியாக கிடந்த தலையை உடல் அருகில் ஒட்டி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அந்த நபர், சிவகங்கை அருகே  பனங்காடி கிராமத்தை சேர்ந்த காளையப்பன் மகன் ராஜசேகரன்(38) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

சாக்கோட்டை இரட்டைக்கொலை வழக்கில் நேற்று காலை சிவகங்கை நீதிமன்றத்தில்  ஆஜராகிவிட்டு திரும்பி வந்த அரை மணி நேரத்தில் அப்பகுதியில் காத்திருந்த கும்பல், ராஜகேரனை வெட்டிக் கொலை செய்துள்ளது. கடந்த 2013 செப்.19ல்  பனங்காடி தோட்டத்தில் ேமாட்டார் அறையில்  தூங்கி கொண்டிருந்த 2 பேர் வெட்டிக்கொலை,   காரைக்குடி சாக்கோட்டையில் சரவணன் (30), அவரது தாய் சிவகாமி(50) ஆகியோர் பஸ்சில் வந்தபோது வெட்டிக் கொலை  ஆகியவற்றில் ராஜசேகரன் முக்கிய குற்றவாளி. இதுதவிர கொலைமுயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகள் அவர் மீது உள்ளன. இதன் காரணமாக முன்விரோதத்தில் அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற  கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Rowdy , Terror ,Sivaganga ,daylight, down
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...