×

தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றியதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு: ஐகோர்ட் அருகே நாளை போராட்டம் நடத்த முடிவு

சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தலைமை நீதிபதிக்கு ஆதரவாக திங்கட்கிழமை உயர்  நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவும் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை 3 நீதிபதிகளே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற குழு பரிந்துரை  செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தலைமை நீதிபதியை மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் எனக்கோரியும் உயர் நீதிமன்ற மூத்த வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை உள்ளிட்ட  100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவாதிக்க உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று வக்கீல் சங்க முன்னாள் நூலகர் ராஜேஷ் சங்கத்தின் தேர்தல் குழு தலைவர் ெசல்லையாவுக்கு கடிதம்  அனுப்பியுள்ளார்.இதற்கிடையே உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே வக்கீல்கள் நாளை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Advocates ,Dahil Ramani ,Meghalaya , Chief Justice ,Tahil Ramani,Decision ,tomorrow's protest ,Icort
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்