மின்வாரியத்தில் வேலை யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: தொமுச வேண்டுகோள்

சென்னை: மின்வாரியத்தில் வேலை பெறுவதற்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என தொமுச வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து ெதாமுச வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக மின்வாரியத்தில் சுமார் 17,000 கள உதவியாளர் பதவியும், 8000 மேற்பட்ட கம்பியாளர் பதவி உள்ளிட்ட   47,817 பதவிகள் காலியாக உள்ளன. மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த பல  ஆண்டுகளாகவே  மின்வாரியத்தில் கம்பங்கள் நடுதல், மின் மாற்றி அமைத்தல், மின் தடை சரிசெய்தல் உட்பட பணிகளை பிரிவு அலுவலகங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

 காலிப்பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை  கொண்டு நிரப்பிட தொமுச தொடர்ச்சியாக வாரியத்தை வலியுறுத்தி வந்தது. பணி நியமனம் செய்யும் போது மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை  அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. எனவே பணிநியமனம் தொடர்பாக தொழிலாளர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : anyone , Work , Electricity, money ,solicitation
× RELATED அயோத்தி வழக்கில் யாருக்கும்...