×

நெருங்குகிறது பண்டிகை சீசன் தங்கம் விலை மேலும் குறையுமா?

மும்பை:  தீபாவளி உள்பட பண்டிகை சீசன் தொடங்கும் நிலையில், கடந்த சில தினங்களாக ஏற்றம் பெற்றிருந்த தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால்தான் நகை விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர். ஆசிய நாடுகள் சந்தைகளில் தங்கத்தின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், விலையேற்றம் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. இருந்தபோதிலும் நவராத்திரி, தீபாவளி  பண்டிகை சீசன் தொடங்குவதால் நகை விற்பனையை கருத்தில் கொண்டு தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கும் முயற்சியில் நகை வியாபாரிகள் உள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தங்கம் அதிகம் வாங்கும் நாடு இந்தியா. கடந்த புதன்கிழமை 10 கிராம் தங்கம் ரூ.39,885 என்ற நிலையில் உச்சம் பெற்றிருந்தது. பின்னர் அடுத்த 2 நாட்களில் வெள்ளியன்று 10 கிராம் தங்கம் ரூ.38,504 என்ற அளவுக்கு குறைந்தது.

தங்கத்தின் தேவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது; பண்டிகை சீசன் தொடங்குவதால், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் அதேவேளையில் தங்கத்தின் விலை குறைந்ததால்தான் நகை விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த தங்க நகை மொத்த விற்பனையாளர் டாமன் பிரகாஷ் ரதோடு தெரிவித்தார்.தங்கம் விலை மேலும் குறையும் என்பதால் தற்போது நகை வியாபாரிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கவில்லை. விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்று மும்பையைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.திருமணம், தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகை சீசனில் மக்கள் அதிக அளவில் நகைகள் வாங்குவார்கள். ஆனால், தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்குமா இருப்பதால் வியாபாரம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்திந் இறக்குமதி கடந்த ஆண்டைவிட 73 சதவீதமாகக் குறைந்தது. விலை உயர்வு மற்றும் இறக்குமதி வரி அதிகரிப்பு போன்றவை தான் இதற்கு காரணம். இருந்தபோதிலும் தங்கம் விலை மேலும் குறையும் என்ற நம்பிக்கையில் நகை வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

Tags : Festive,Season ,Gold Price,Drop Down
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...