×

ஆப்கானிஸ்தான் வலுவான முன்னிலை

தாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான்  அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரகமத் ஷா 102, அஸ்கர் ஆப்கன் 92, அப்ஸர் ஸசாய் 41, கேப்டன் ரஷித் கான் 51 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மோமினுல் 52, மொசாடெக் 48*, லிட்டன் தாஸ் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் கேப்டன் ரஷித் கான் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதைத் தொடர்ந்து, 137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான், 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர் இப்ராகிம் ஸத்ரன் (17 வயது) 87 ரன், அஸ்கர் ஆப்கன் 50, ரஷித் கான் 24, குவாயிஸ் அகமது 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஸசாய் 34, யாமின் (0) இருவரும் களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் 3, தைஜுல், நயீம் தலா 2, மிராஸ் 1 1 விக்கெட் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் கை வசம் 2 விக்கெட் இருக்க, 374 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் வங்கதேச அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது. ஆப்கன் வீரர் முகமது நபி (34 வயது), இந்த போட்டியுடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


Tags : Afghanistan , Afghanistan , a strong,front
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி