×

2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா திணறல்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்டில், ஆஸ்திரேலிய  அணி 2வது இன்னிங்சில் 44 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (126 ஓவர்). ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 211 ரன் விளாசினார். லாபஸ்ஷேன், பெய்ன் 58, ஸ்டார்க் அரை சதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 62, ரூட் 47 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்தது. பர்ன்ஸ் 81 ரன் (185 பந்து, 9 பவுண்டரி), கேப்டன் ஜோ ரூட் 71 ரன் (168 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து வந்த ராய் 22, ஸ்டோஸ் 26, பேர்ஸ்டோ 17, பட்லர் 41 ரன் எடுக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 301 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 196 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 14 ஓவரில் 44 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. வார்னர் 0, ஹாரிஸ் 6, லாப்ஸ்ஷேன் 11, ஹெட் 12 ரன்னில் வெளியேறினர்.இதனால் இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.

Tags : Australia , Australia,stuttered, the 2nd,inning
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை