×

சப்தகிரி சுழற்கோப்பை வாலிபால் சென்னை கல்லூரிகள் அசத்தல்

சென்னை: புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பத்தில், பாரதிதாசன் விளையாட்டு மன்றம் சார்பில் 40வது சப்தகிரி சுழற்கோப்பை வாலிபால் போட்டி நடந்தது. இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த எஸ்ஆர்எம் ஐஎஸ்டி, டிஜி வைஷ்ணவா கல்லூரி ஆகியவை மோதின. இதில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி கல்லூரி  25-14, 25-20, 25-18 என்ற செட்களில் வென்று சுழற்கோப்பையை கைப்பற்றியது. இந்த அணியின் வீரர் ஏ.மது சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை டிஜி வைஷ்ணவா 2ம் இடம் பிடித்தது. அரை இறுதியில் தோற்ற பொள்ளாச்சி எஸ்டிசி, புதுச்சேரி பாரதிதாசன் விளையாட்டு மன்றம் 3வது இடத்தை பிடித்தன.

Tags : Madras Colleges Surprise , Volleyball,Madras ,Colleges ,Surprise
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...