×

15ம் தேதி அண்ணா பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை: திமுக தொண்டர்களுக்கு அழைப்பு

சென்னை: அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 15ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட திமுக சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அறிஞர் அண்ணாவின் 111வது ஆண்டு பிறந்த நாளான வருகிற 15ம் தேதி காலை 7 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

அப்போது திமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அனைத்து அணியினரும் மற்றும் திமுக தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Anna ,birthday party , Anna's birthday,party, May 15
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்...