×

2014ல் 339 பேருடன் காணாமல்போன மலேசிய விமானம் குறித்து அறிவியல்பூர்வமான விசாரணை கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: கடந்த 2004ல் கடலில் விழுந்து காணாமல் போனது தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த பிஜூ குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014 மார்ச் 8ம் தேதி நானும் எனது நண்பர்கள் சுஜித் சுதாகரன், ஸ்டாலன் சசிதரந், ஜெயராஜ் ஆகியோர் திருவனந்தபுரம் அந்தோனியார் ஆலயம் அருகே உள்ள கடற்கரையில் அமர்ந்திருந்தோம். அப்போது, ஒரு விமானம் கடலில் விழுவதை பார்த்தோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த இந்த நிகழ்வை நாங்கள் எங்கள் கண்களால் கண்டோம்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள், மற்றும் ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தோம். இந்நிலையில் மறுநாள் பத்திரிகைகளில் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகரமான பீஜிங் நோக்கி சென்ற மலேசிய போயிங் விமானம் 12 விமான ஊழியர்கள் மற்றும் 227 பயணிகளுடன் (339 பேர்) காணாமல் போய்விட்டது என்று செய்தி வந்ததை பார்த்தோம்.

இதையடுத்து, உடனடியாக கேரள மாநிலம் தும்பாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) சென்று தகவல் தெரிவித்தோம். இஸ்ரோவில் இருந்தவர்கள் ரேடார் மூலம் ஆய்வு செய்துவிட்டு  அரபிக்கடலில் விமானம் விழுந்தது குறித்து சரிவர தெரியவில்லை என்று தெரிவித்தார்கள். இதையடுத்து நான் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு சென்று விமானம் அரபிக்கடலில் விழுந்ததை பார்த்த விஷயத்தை சொன்னோம். அவர்கள் இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்தார்கள். ஆனால், ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, மலேசியாவிற்கு சென்று மலேசிய விமான காவல் ஆணையத்திடம் தெரிவித்தேன். அதனாலு–்ம் எந்த பயனும் ஏற்படவில்லை.பின்னர் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் விமானம் காணாமல் போன விபரத்தை தெரிவித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு, இஸ்ரோ உள்ளிட்டோருக்கு பல மனுக்களை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து மலேசிய விமானம் காணாமல் போன விபரம் குறித்து அறிவியல் ரீதியிலான விசாரணையை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags : Malaysian ,persons , Malaysian plane,339 persons, missing , 2014
× RELATED மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் பலி