×

பண்ருட்டி பஸ்நிலையத்தில் தேங்கி நிற்க்கும் மழைநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இலவச குடிநீர் வசதி, பயணிகள் அமர்வதற்கு சிலாப் வசதியும்  இல்லை. இதனால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் தரையில் அமருகின்றனர். இலவச கழிப்பிட வசதியில்லை. போதிய மின் விளக்கு இல்லாததால், பயணிகள் இரவு நேரங்களில் அச்சத்தில் உள்ளனர்.  பேருந்து நிற்கும் இடத்தில் ஊர்களின் பெயர்பலகை இல்லை. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அதிகம் குழப்பமடைகின்றனர். பேருந்துகள் வரிசையாக நிற்காமல் ஒழுங்கற்ற முறையில் நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

பேருந்து  நிலையத்தில் தரை தளம் போடப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பள்ளத்தில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் அதிகம் சிரமப்படுகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் குண்டும் குழியுமாக உள்ள தரை தளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



Tags : Stagnant Rainwater at Panruti Bus Stand: Risk of Infection
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...