×

குடியரசு தலைவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான் எல்லை வழியாக செல்ல அனுமதி மறுப்பு: ஏ.எப்.ஐ தகவல்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்ட நிலையில் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளதாக பாக். அமைச்சர் குரேஷி தகவல் அளித்துள்ளதாக ஏ.எப்.ஐ தெரிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 9ம் தேதி குரியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்துக்கு செல்லவுள்ளார். அதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது.  தற்போது காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த பால்கோட் தாக்குதல் காரணமாக வான்வெளி பயணத்திற்கு தடை பாகிஸ்தான் தடை விதிப்பதாக தெரிவித்தார். இருந்த போதும் கடந்த மார்ச் மாதம் ஒரு சில விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்திய விமானங்களுக்கு அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலை நீடித்துக்கொண்டு தான் இருந்தது. இந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 9ம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, சல்வேனியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பாகிஸ்தான் வான்வெளி வழியாக பயணத்திற்கு அனுமதி கேட்ட நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags : President ,AFI ,airspace ,Pakistani , President, Ramnath Govind, Flight, Pakistan, Airspace, Permission, Denial
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...