×

லால்குடி அருகே அரசு பள்ளி மைதானத்தை சூழ்ந்துள்ள வாய்க்கால் நீர்

*மாணவ, மாணவிகள் அவதி

லால்குடி : லால்குடி அருகே அரசு பள்ளி மைதானத்தை சூழ்ந்துள்ள வாய்க்கால் நீரால் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் ஊராட்சியில் உள்ளது அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மாதம் 28ம் தேதி முக்கொம்பு மேலணையிலிருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக 400 கன அடி தண்ணீர் திறந்தனர். தற்போது காவிரியாற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீரின் அளவு 500 கன அடியாக திறந்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மழைநீர் செல்வதற்க்கு வடிகால் கால்வாய் அமைத்துள்ளனர். இந்த கால்வாய் பள்ளி சுற்றுச்சுவரின் அருகிலேயே செல்கிறது. இந்நிலையில் புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வடிகால் கால்வாய் வழியாக தண்ணீர் புகுந்து மைதானத்தை சூழ்ந்தது.இதனால் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வழியாக மாணவ, மாணவிகள் செல்கின்றனர். இதில் உயர்நிலைப்பள்ளியில் உள்ள குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் வெளியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags : Government school ground ,Lalgudi , Lalkudi ,government school ,Rain water
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...