சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா செய்துள்ளார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்ததையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கும் தஹில்ரமணி ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  திங்கள்கிழமை முடிவு செய்வார் எனத் தெரிகிறது.


Tags : Tahilramani ,Chennai High Court , High Court, Chief Justice, Tahilramani, resignation
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு...