×

சந்திரயான்-2 பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. ராமதாஸ் ட்வீட்

சென்னை : சந்திரயான் -2 விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும் என்றும் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ராமதாஸ் பின்வருமாறு,2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில்  நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான் -2 ஏற்படுத்தியுள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : world ,Ramadas , Chandrayaan-2, Space, Scientists, ISRO, Ramadas
× RELATED கந்தர்வகோட்டை அருகே உலக பாரம்பரிய தின ஓவியப்போட்டி