×

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி

பெங்களூரு : லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் தைரியமாக இருங்கள் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார். தற்போதைய சாதனை சாதாரண விஷயமல்ல என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். மேலும் இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை தட்டிக் கொடுத்து மோடி ஆறுதல் கூறினார்.

சந்திரயான் -2 நிலவை நெருங்கியது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனை, விஞ்ஞானிகளின் உழைப்பைக் கண்டு நாடு பெருமை அடைகிறது, நாடு, அறிவியல், மக்களுக்கு பெரும் சேவையாற்றியுள்ளீர்கள், மேலும் நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் நமது விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் எனறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆர்பிட்டர் தொடர்ந்து பணி செய்யும்

சந்திரயான்- 2ன் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் சந்திரயான் -2 திட்டமே தோல்வி எனக் கருத முடியாது. ஆர்பிட்டர் 95% பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

யாருமே நெருங்காத தென் துருவப் பகுதி

லேண்டர் விக்ரம் தரை இறங்கிய பகுதி இதுநாள் யாருமே நெருங்காத பகுதியாகும். இதற்கு முன் நிலவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும்
வட துருவம் அல்லது பூமத்திய ரேகை பகுதியில்தான். சீனா மற்றும் ரஷ்யாவின் நிலவு திட்டங்கள் வட துருவப் பகுதியிலும், அமெரிக்காவின் அப்பல்லோ உள்ளிட்ட பெரும்பாலான நிலவில் தரையிறங்கும் முயற்சிகள் பூமத்திய ரேகை பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Tags : Modi ,scientists ,ISRO , PM Modi hopes,ISRO scientists
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...