×

எழும்பூர்- வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எழும்பூர்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை எழும்பூர்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இன்று இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8 மணிக்கு சென்றடையும். அதேபோன்று வேளாங்கண்ணி- ெசன்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Southern Railway ,Velankanni ,Egmore , Southern Railway,special trains,Egmore-Velankanni
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...