×

நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இஎஸ்ஐசி குறைதீர் கூட்டம்: வரும் 12ம் தேதி நடக்கிறது

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இஎஸ்ஐசி குறைதீர்ப்பு கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் வரும் 12ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது. எனவே தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : ESIC Oversight Meeting ,Nungambakkam Regional Office , Nungambakkam Regional Office, ESIC Grievance Meeting
× RELATED சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு