காதல் திருமணம் செய்த தகராறு மாமனார், மாமியாருக்கு வெட்டு: மருமகன் உள்பட 8 பேருக்கு வலை

புழல்: செங்குன்றம் அருகே எடப்பாளையத்தில் காதல் திருமணம் செய்த தகராறில் வீடு புகுந்து மாமனார், மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் திருவள்ளூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பவன் (எ) முனுசாமி (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜி (58). இவர்களது மகள் உமா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உமா அதே பகுதி மணிகண்டன் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்தே மாமனாருக்கும், மருமருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மணிகண்டன் தனது நண்பர்கள் 8 பேருடன் மாமியார் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மாமனார் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாமியார் விஜி தடுக்க ஓடி வந்தபோது அவருக்கும் வெட்டு விழுந்தது. இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மணிகண்டன் மற்றும் அவரது கும்பல் தப்பி சென்றனர். பின்னர் படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகன் மணிகண்டன் மற்றும் அவரது கும்பலை தேடி வருகின்றர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Tags : father-in-law ,sons ,son-in-law , Love marriage, father-in-law, father-in-law, cut, nephew
× RELATED போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மாமனாருக்கு சரமாரி கத்திக்குத்து