×

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஒரு நபர் கமிஷனுக்கு மேலும் அவகாசம் அளிப்பது ஏன்? : மனித உரிமை ஆணைய விசாரணைக்கு வந்தவர்கள் கேள்வி

நாகர்கோவில்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மனித உரிமை ஆணையத்துக்கு சென்ற புகார்கள் மீதான 4ம் கட்ட விசாரணை நாகர்கோவில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மனித உரிமை ஆணைய உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரணை நடத்தினார். இதற்கு 3 மாவட்டங்களில் இருந்தும் புகார் அளித்தவர்கள், காவல்துறை, வருவாய்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் வந்தனர். குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான புகார்கள் அதிகளவில் விசாரிக்கப்பட்டன. இதில் முக்கிய புகார்தாரரான அக்ரி பரமசிவம் ஆஜரானார். இவர், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக விசாரணை நடந்தது.

பின்னர் அக்ரி பரமசிவம் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டியில் 13 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்ேடார் உடல் உறுப்புகளை இழந்து பெரிய அளவில் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இப்போது, மேலும் 6 மாதம் அவகாசம் அளித்துள்ளனர். இதற்கு, மேலும் அவகாசம் அளிப்பது ஏன்?  எனவே இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

Tags : Commission ,Sterlite ,Human Rights Commission , Sterlite issue,e Commission more time,Human Rights Commission questioned
× RELATED கொரோனாவுக்கு முதியவர் பலி