புதுச்சேரி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா : டிடிவி தினகரனுக்கு கடிதம் அனுப்பினர்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அமமுக செயலாளராக வேல்முருகனுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்தநிலையில் அவரையே மீண்டும் மாநில செயலாளராக டிடிவி.தினகரன் நியமித்துள்ளார். இதற்கு  புதுச்சேரி மாநில அமமுக நிர்வாகிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி அமமுக நிர்வாகியும், எம்பி தேர்தலில் போட்டியிட்டவருமான  தமிழ்மாறன், அமமுக அம்மா பேரவை செயலாளர் மூர்த்தி, மாநில துணைத் தலைவர்  பாண்டுரங்கன், இணை செயலாளர் உமாமோகன், துணை செயலாளர்கள் செந்தில்முருகன்,  அன்பு உள்ளிட்ட தொகுதி மற்றும் அணி செயலாளர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர்  கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று கொசக்கடை  வீதியில் கூடி ஆலோசனை நடத்திய அவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை டிடிவி  தினகரனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உட்கட்சி பூசல் காரணமாக புதுச்சேரி  அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : PMU ,Puducherry ,executives , Puducherry AMMK executives resign, TTV Dinakaran
× RELATED சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு