×

காவல் நிலையத்தில் புகுந்த கும்பல் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு கைதி விடுவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்த மர்மக்கும்பல் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதியை விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பெஹரர் காவல் நிலையத்திற்குள் நேற்று அதிகாலை 15 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தது. அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த ஏகே 47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். சுமார் 45 ரவுண்ட்கள் சுட்டதால் காவல் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த போலீசார் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அருகே இருந்த அறையில் ஒழிந்து உயிர்தப்பினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு அடைக்கப்பட்டிருந்த கொலைக்குற்றவாளி பாப்லாவை அந்த கும்பல் விடுவித்து அழைத்து சென்றனர்.

பாப்லா என்ற அந்த கைதி அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று அதிகாலை போலீசார் பெஹரர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியை வந்த வாகனத்தை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்த ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தில் வந்த கும்பல் தப்பியோடிய நிலையில் பிடிபட்ட பாப்லாவை விசாரணைக்கு அழைத்து வந்து பெஹரர் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர். இதுபற்றி அறிந்த தப்பியோடிய கும்பல் மீண்டும் ஏகே 47 துப்பாக்கியுடன் வந்து பாப்லாவை விடுவித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.   விடுவிக்கப்பட்ட பாப்லா மீது 5 ெகாலை வழக்கு உள்ளது. அவரை பிடித்து கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாகவும் போலீசார் அறிவித்திருந்த நிலையில் பாப்லா போலீசார் பிடியில் சிக்கியதால் அவரது கூட்டாளிகள் அவரை நேற்று துப்பாக்கியுடன் வந்து விடுவித்து சென்றனர்.

Tags : gang ,AK-47 ,police station , Police Station, AK-47 rifle, detention
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...