×

இங்கிலாந்து நிதான ஆட்டம்

மான்செஸ்டர்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்டில், இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (126 ஓவர்). ஸ்மித் 211 ரன் (319 பந்து, 24 பவுண்டரி, 2 சிக்சர்), லாபஸ்ஷேன் 67, கேப்டன் பெய்ன் 58, மிட்செல் ஸ்டார்க் 54*, லயன் 26* ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு 3, லீச், ஓவர்ட்டன் தலா 2, ரூட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, மழையால் பாதிக்கப்பட்ட நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தில், 46 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 62, ரூட் 47 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.


Tags : England , England, Australian team
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது