×

ரஷித் கான் அபார பந்துவீச்சு: வங்கதேசம் திணறல்

தாக்கா: ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான நேற்று, அந்த அணி முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரகமத் ஷா 102, அஸ்கர் ஆப்கன் 92, அப்ஸர் ஸசாய் 41, கேப்டன் ரஷித் கான் 51 ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4, ஷாகிப் ஹசன், நயீம் ஹசன் தலா 2, மிராஸ், மகமதுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம், 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்துள்ளது. லிட்டன் 33, மோமினுல் ஹக் 52, சர்கார் 17, கேப்டன் ஷாகிப் ஹசன், மிராஸ் தலா 11 ரன் எடுத்தனர். மொசாடெக் உசேன் 44 ரன், தைஜுல் இஸ்லாம் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ரஷித் கான் 4, முகமது நபி 2, யாமின், குவாயிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 2 விக்கெட் இருக்க, வங்கதேசம் 148 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Rashid Khan Apara ,Bangladesh , Rashid Khan, Bangladesh, Afghanistan
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...