×

தொட்ட... கெட்ட...: பாகிஸ்தானுக்கு வெங்கையா எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம்,’’ என பாகிஸ்தானுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்தார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்,  ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அவரது 95 பேச்சுகள் அடங்கிய புத்தக தொகுப்பு நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:

 நம் மீது ஆத்திரமூட்டும் செயல்களை யாராவது செய்தால், நாம் அவர்களை எதிர்த்து எதையும் செய்வதில்லை. இதை சமீபகாலமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், யாராவது நம் நாட்டை தாக்கினால் அவர்களின் எஞ்சிய காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இதை நமக்கு தொந்தரவு தருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். காஷ்மீர் விவகாரத்துக்காக இந்தியா மீது தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் சமீப காலமாக பூச்சாண்டி காட்டி வருகிறது. இதை மறைமுகமாக சுட்டிக்காட்டியே, அந்நாட்டுக்கு இந்த எச்சரிக்கையை வெங்கையா விடுத்துள்ளார்.

Tags : Pakistan , Pakistan, Venkaiah
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...