டி 20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை

பல்லெகெலே: நியூசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-1 என சமனில் முடிந்தது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.  இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3 -வது போட்டி இன்று பல்லெகெலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை படைத்துள்ளார்.

Related Stories:

More
>