×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி பதவி உயர்வுபெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Thakil Ramani ,Chennai High Court , Tahil Ramani resigns as Chief Justice of Madras High Court
× RELATED தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்...