×

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகமான நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 117.50 அடி, அணையின் நீர் இருப்பு - 89.679 டி.எம்.சி, நீர் வெளியேற்றம் 18,700 கன அடியாக உள்ளது. மேலும், தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 75,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் விரைவில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Mettur Dam, Water Resources, Increase
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...