×

கருத்தை கேட்காமல் மக்கள் மீது திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது: டி.ராஜா குற்றச்சாட்டு

நாகை: நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா நேற்று அளித்த பேட்டி:காஷ்மீர் மாநிலத்தின் 370வது சட்ட பிரிவை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு நீக்கியுள்ளது. அந்த மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக அறிவித்து 1 மாதம் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் அமைதி  திரும்பவில்லை. பாஜ அரசு சட்டத்திற்கு விரோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு ஆர்எஸ்எஸ்  கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

இந்திய நாட்டின் பொருளாதாரம் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. தொழிற்துறை, விவசாயதுறை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.பாஜ அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசாகவே உள்ளது.  மோடி அரசு வருமான வரித்துறை, சிபிஐ என்று எல்லாவற்றையும் தனது கைக்குள் போட்டுக்கொண்டு எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.  நமது நாட்டின்  சட்டத்தை சுதந்திரமாக செயல்பட பாஜ அரசு அனுமதிக்கவில்லை. பாஜ அரசு ஊழல் எதிர்ப்பிலும் நேர்மையை கடைபிடிக்கவில்லை. எந்த திட்டத்தையும் கருத்து கேட்காமல் மக்கள் மீது திணிக்கும் கொள்கையை பாஜ அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : comment, Central government, D. Raja ,alleges
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...