×

வர்த்தகப்போர் விவகாரம் அமெரிக்கா-சீனா இடையே அடுத்த மாதம் பேச்சுவார்த்தை: தங்கம் விலை குறைய வாய்ப்பு

பீஜிங்: வர்த்தகப்போரை தணிக்கும் விதமாக அடுத்த மாதம் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, சீனா சம்மதித்துள்ளன. அமெரிக்கா - இடையே வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்காதான். அதோடு, தனது நாட்டின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்த பிணக்கின் உச்சகட்ட வெளிப்பாடாக, இரு நாடுகளும் பழிக்குப் பழியாக நடவடிக்கையாக இறக்குமதி வரியை அதிகரித்தன. இதனால், அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்த கதியில் உள்ளது.  இந்த நிலையில், வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்கா - சீனா இடையே உயர் மட்ட குழு பேச்சுவார்த்தை வாஷிங்டனில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25,000 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு, இறக்குமதி வரியை அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து 30 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுபோல் அமெரிக்க கச்சா எண்ணெய்க்கும் சீனா வரி விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள உயர் மட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால், தங்கம் விலை குறையவும் வாய்ப்புகள் உள்ளன என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Trade War, USA, China, Gold Price
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...