×

ஆற்றில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறுகட்டி பாதுகாப்பாக மீட்பு

கம்பம்:  தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஷாருகேஷ். அதே ஊர் நெல்லுக்குத்தி புளியமர தெருவைச் சேர்ந்தவர் ரூபன் (18). இருவரும் கல்லூரி மாணவர்கள். அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (17), 12ம் வகுப்பு மாணவர். நண்பர்களான மூவரும் கம்பம் அருகே, சுருளிப்பட்டி சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் தொட்டமான்துறை தடுப்பணை பகுதியில் நேற்று குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்தபோது நீர்வரத்து குறைவாக இருந்தது. திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மூவரும் ஒரே இடத்தில் நின்று, கைகளைப் பற்றிக்கொண்டு ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என அபயக் குரல் எழுப்பினர். அப்பகுதி மக்கள், தகவலின்படி கம்பம் தெற்கு போலீசார், தீயணைப்புத் துறையினர் வந்து ஆற்றில் இறங்கி, கயிறுகட்டி மூவரையும் பத்திரமாக மீட்டனர். பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அலுவலர் கூறுகையில், ‘‘பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர்தான் திறந்து விடப்படுகிறது. சிறுபுனல் மின்உற்பத்தி நிலையங்களில், தேக்கி வைக்கப்பட்ட நீரை திறந்துவிட்டால், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றார்….

The post ஆற்றில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறுகட்டி பாதுகாப்பாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Gampam ,Shahrukesh ,Kamatsiyamman Koil Street ,Theni District, Gampam ,Nellukutthi Puliyamara Street ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...