×

லண்டனில் சர்வதேச புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை முதல்வர் பார்வையிட்டார்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கீவ் தாவரவியல் பூங்காவினை நேற்று பார்வையிட்டார்.தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கீவ் (KEW) தாவரவியல் பூங்காவினை பார்வையிட்டு தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  பல்வேறு நாடுகளின் அந்தந்த பருவகாலங்களில் வளரும் பூச்செடிகள், காய்கறிசெடிகள், மற்றும் பலவகையான தாவரங்கள்  இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கீவ்’ தாவரவியல் பூங்காவில் அந்தந்த தாவரங்களுக்கு ஏற்ற காலநிலையை  செயற்கையாக  ஏற்படுத்தி உலகமே வியக்கும் வண்ணம் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அமேசான் மழைக்காடுகளில் வளரும் தாவரங்கள், பாலைவனத்தில் வளரும் தாவரங்கள், குளிர் பகுதியில் வளரும் தாவரங்களின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு  முறை குறித்து பார்வையிட்டு, அதை வேளாண் ஆராய்ச்சிக்காக எவ்வாறு  பயன்படுத்துவது என்பது குறித்தும்  கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள் எஸ். விஜயகுமார், பி. செந்தில்குமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடனிருந்தனர்.

Tags : Internationally renowned ,London,Chief Minister ,Botanic Gardens
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...