சென்னை: காசி மேட்டில் பொதுமக்கள் ஒரே இடத்தில் நெருக்கமாகவும், மாஸ்க் அணியாமலும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை ரொம்பவே தீவிரமாகி உள்ளது. கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த ஒரு நாள் பாதிப்பு, நேற்று 1.50 லட்சத்தை கடந்து மருத்துவத் துறையையே அதிர வைத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதியான 2 ஆயிரம் பேருக்கு மேல் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ஓட்டல், மால்கள், மத சடங்கு, இறப்பு உள்ளிட்டவற்றிற்கு அதிகபட்சம் 50 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக 1100க்கு மேல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினாவில் விடுமுறை நாளில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளை விதித்த சென்னை மாநகராட்சி காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் விற்பனை செய்யும் இடத்துக்கு வழிகாட்டி நெறிமுறைகளை பொதுவாக சொல்விட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகாலை முதலே கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்களை பிடித்து வந்தபடி இருந்தனர். அவர்களிடம் இருந்து சில்லறையில் மீன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி ஒருவரை ஒருவர் முண்டியடித்து மீன்களை குறைந்த விலைக்கு வாங்க ேபாட்டி போட்டனர். அதேபோல பொதுமக்களும் பிரஷ்ஷாக மீன்களை வாங்க குடும்பத்துடன் காசிமேடு துறைமுகத்தில் குவிந்தனர். பலர் மாஸ்க் அணியவில்லை. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு சில்லறை வியாபாரிகளிடம் பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்றனர்.இதனால் காசிமேடு மீன்விற்கும் இடம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக, கட்டுபாடு அற்ற நிலையில் இருந்ததை காண முடிந்தது. இதை ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகள், போலீசார் யாரும் அதை கண்டுகொள்வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்….
The post காற்றில் பறந்த வழிகாட்டி நெறிமுறைகள் காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம்: அதிகாரிகள் அலட்சியம் appeared first on Dinakaran.