×

திருவேற்காடு கோயிலில் சசிகலா சிறப்பு தரிசனம்

பூந்தமல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனையை கர்நாடக சிறையில் அனுபவித்தார். தண்டனை காலம் முடிந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலையாகி சென்னை வந்த சசிகலா, அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக அறிவித்தார். பின்பு, தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலா, கோயிலுக்குள் மூலவர் அம்மன், உற்சவர் அம்மன், பிரத்தியங்கிரா தேவி உள்பட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற 108 சங்காபிஷேக பூஜையில் சசிகலா பங்கேற்றார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் எலுமிச்சை பழ மாலையை பிரசாதமாக அளித்தனர்….

The post திருவேற்காடு கோயிலில் சசிகலா சிறப்பு தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Tiruvedu Temple ,Poonthamalli ,CM ,Jayalalitha ,
× RELATED பூந்தமல்லியில் பரபரப்பு இந்து...