×

அமேசான் தீயை அணைக்க பிரான்ஸ் உதவி தேவையில்லை

பிரேசிலியா: பொலிவியா, கொலம்பியா, கயானா உள்பட 8 நாடுகளில் பரந்துள்ள அமேசான் காடுகளின் 60 சதவீதம் பிரேசிலில் உள்ளது. பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக  காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அமேசான் தீயை அணைக்க பிரான்ஸ் ரூ.140 கோடி நிதி உதவி அளிக்கும் என்று அதன் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை பிரேசில் அதிபர் சயீர் போல்சோனரோ நிராகரித்து  விட்டார். இது தொடர்பாக அவரது அரசின் முதன்மை செயலர் ஓனிக்ஸ் லோரன்ஜோனி கூறிய போது, ``இந்த உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நிதியைக் கொண்டு ஐரோப்பிய நாடுகளில் காடுகளை வளர்த்து கொள்ளுங்கள்.  பிரான்சையும் அதன் காலனி நாடுகளையும் கவனித்து கொள்ளுங்கள்,’’ என்றார்.

Tags : To extinguish ,Amazon fire, help
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்