×

துளித்துளியாய்......

* தனது புதிய அஸ்திரமாக அவுட்ஸ்விங்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ராவை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் ஆண்டி ராபர்ட்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில் ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கீப்பர் கிர்மானி கூறியுள்ளார்.
* பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விழா செப்டம்பர் 12ம் தேதி  நடைபெறும்.  
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் எப்சி புனே சிட்டி அணிக்கு பதிலாக ஐதராபாத் எப்சி அணி சேர்க்கப்படுகிறது.
* மறைந்த ஆஸி. நட்சத்திரம் சர் டொனால்டு பிராட்மேனின் 111வது பிறந்ததினத்தை முன்னிட்டு, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். 1998ம் ஆண்டு அவரை நேரில் சந்தித்த அனுபவங்களை சச்சின் தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags : Droplet, Dropping …….
× RELATED ஓசூர் அருகே ஸ்டாப்பில் நிறுத்தாததால்...